Friday 18 September 2015

இளம் வயதினரின் கலாச்சாரம


 பழைய காலத்தில் எல்லாம் ஒரு வீட்டுத் திருமணத்திற்குக் கணவன் மனைவி இருவரும் போனால் அவர்கள் வீட்டு வைபவத்திற்கு எதிர் மரியாதை கொடுக்கும் விதமாக இவர்களும் தம்பதி சகிதமாகப் போய் வருவார்கள் .
மொய்ப் பணத்திலும் அதே மாதிரியான  ஃ பார்முலா  தான் .
ஆனால் இவை எழுதப்படாத சட்டம்.
 இன்றைய இளம் வயதினரின்
கலாச்சாரமும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான்.
 ஆனால் அது ஃ பேஸ் புக் லைக் போட   மற்றும்  பிறந்த வாழ்த்துக்களுக்கு இந்த ரூல் ஃ பாலோ பண்ணுகிறார்கள் .

 சொல்லப்போனால் வாழ்க்கையே ஃ பேஸ் புக்கிற்கு மட்டுமேஎன்றே  சுருக்கி விட்ட தலைமுறை இந்தத் தலைமுறை என்று கூடச் சொல்லலாம்.

 என் உறவினர் மகளுக்கு   வங்கிப் பரிக்ஷை எழுத  உபயோகப்படும் சில லிங்கு களை நான் இ-மெயில் மூலம் அனுப்பினேன் .
அந்த லிங்குகள் வந்தன ,நன்றி என்ற ஒரு பதில்  இ-மெயிலோ அல்லது அந்த லிங்குகள் உபயோகமாக இருந்தனவா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை .
ஆனால் செம காமெடி என்னவென்றால்அந்தப்  பொண்ணு மிகச் சம்பிரதாயமாக என் ஃ பேஸ் புக் போஸ்டிங்குகளுக்கு அனுதினமும் மறவாமல் லைக் போடுகிறது .

ஃ பேஸ் புக் கை ஓதாமல் ஒரு நாளும் இருக்காத தலைமுறையின் குணாதிசயங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

5 comments:

  1. எப்படித்தான் திருத்துவது இந்த இளம் தலைமுறையினரை?

    ReplyDelete
  2. //வங்கிப் பரிக்ஷை எழுத உபயோகப்படும் சில லிங்கு களை நான் இ-மெயில் மூலம் அனுப்பினேன் // அந்த இணைப்புகளை பதிவில் வெளியிட்டிருக்கலாமே. என் மகளுக்கும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி . பதிவே போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  4. அந்த லிங்குகள் வந்தன ,நன்றி என்ற ஒரு பதில் இ-மெயிலோ அல்லது அந்த லிங்குகள் உபயோகமாக இருந்தனவா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை .//

    சகோ இது இப்போது ரொம்ப சகஜமான நிலையாகிவிட்டது. எந்த ஒரு இளைஞரோ, இளைஞியோ (?) பதில் அதுவும் மின் அஞ்சலில் எல்லாம் அனுப்புவதே இல்லை. பல சமயங்களில் நமக்குச் சந்தேகம் வரும் நாம் அனுப்பிய அஞ்சல் போய் சேர்ந்ததா அந்த ஐடி சரிதானா என்று....ம்ம்ம் இப்போதெல்லாம் மின் அஞ்சல் என்பதும் ஏதோ நம் தபால் நிலையம் போல் பழசாகிவிட்டதோ என்று...

    மேலை நாடுகளில் அவர்கள் குறிப்பாக, கல்லூரிகள்ம் நிறுவனங்கள் எல்லாமே ஃபோன் என்பதைக் கூட அவ்வளவாக உபயோகிப்பதில்லை. எல்லாமே மின் அஞ்சல் தான், தபால் தான். இல்லை நேர்முகத் தேர்வு மிக மிகத் தேவையாக இருந்தால் தொலைபேசியில் அதுவும் மிகவும் சுருக்கமாக இல்லை என்றால் ஸ்கைப் வழியாகத்தான். எந்த மின் அஞ்சலுக்கும் பதில் வந்துவிடும்.

    நம் இளைஞர்கள் மேலை நாடுகளுக்குப் போவது குறித்து மிகவும் ப்ரயத்தனப்படுகின்றார்கள். இந்தத் தொடர்பு கொள்ளும் மேலாண்மையும்/கம்யூனிக்கேஷன் என்பது மிகவும் முக்கியம் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு,வளர்த்துக் கொள்வது நல்லது...

    ReplyDelete