Friday 30 August 2013

ஆறு மனமே ஆறு என்பதால் வந்த வினை

 யாராவது கஷ்டத்தில் இருக்கும் போது  ஆறுதலாக ரெண்டு வார்த்தை சொல்வது மனிதனாகப் பிறந்த  யாருமே செய்வது தானே என்று நினைத்து சொல்லப்  போக என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?
அதுவும் நம்முடன் நெருங்கிப் பழகியவர்களே உன்னை மாதிரி ஆளை எல்லாம் ....... கொன்னா கூட பாவம் இல்லை   என்றால் எப்படி இருக்கும் ?
இந்த விஷயத்தை கேட்ட எல்லாருமே என்னைப் பார்த்து செம முறை முறைக்கிறார்கள் 
இதை நீங்களாவது  கேட்டுவிட்டு  நியாயத்தைச் சொல்லுங்கள்.


 எனது நெடு நாள் தோழி  ஒருவர் வயது ஆக ஆக மறதி  ஜாஸ்தி ஆகிறது ''ஃ .பிரிட்ஜ் கிட்டே போகிறேன் ,ஆனா எதுக்குப்போறேன்னு  மறந்து போகிறது. எதுவுமே  வெச்ச இடம் மறந்து  போகுது
  
.ஒவ்வொண்ணையும் தேடி தேடி அலுத்து போகுது என்ன பண்றதுன்னே புரியலை .யோகா பண்ணலாம்ன்னு உக்காந்தாலும் உடம்பும் நிலை கொள்ளாமல் தவிக்குது. மனசும் இஷ்டத்துக்கு ஊர ஓசியிலேயே கன்னா பின்னான்னு வளைய வருது 
புத்தி கெட்ட புருஷட னோட கூடஏதோ  காமா சோமா ன்னு கதையை ஓட்டிட்டேன்  ஆனா ஞாபக மறதியோட வாழ்றது ரொம்ப கஷ்டம்பா முடியலை  தாங்காது  ''என்ற புலம்பல் புராணம் போனில் !அவர் சாதாரண மிடில் கிளாஸ் ஃ பேமிலி 
 
இப்படி சொல்பவர்களுக்கு  ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதற்காக நான் சொன்னேன்  " இதெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமே இல்லை நாட்டில் பல பேருக்கு  இருக்கு..அவ்வளோ பணம் வெச்சிட்டு இருக்கிற அம்பானிக்கு கூட இருக்கு.அவருக்கு  ஞாபக மறதின்னாக்க எவ்வளவு கோடிக்கனக்கிலே லாஸ்  ஆகும். அதைப்பத்தி அவரும் கவலைப்படலை ,
அவர் கம்பெனியிலே பணம் போட்ட யாருமே கவலைப்படலை .ஒங்க ஞாபகமறதி யாலே யாருக்கும்  தொல்லை இல்லை நிம்மதியா இருங்கோ "

 இப்ப சொல்லுங்க  நான் சொன்னது சரிதானே! 

2 comments:

  1. சரியா தான் சொன்னீங்க
    ஆனால் அதுக்கு அவங்க பதில் என்னவென்று சொல்லவில்லையே,,,,

    ReplyDelete