Tuesday 20 August 2013

தலையாய பிரசினைகள்

 கடந்த ஒரு வாரமாக பிளாகிலும் மற்ற ஊடகங்களிலும் விஜயின்  "தலைவா "படம் வருமா வராதா என்றும் காரணம் என்ன என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு  எவ்வளவு  நஷ்டம் விஜய் க்கு அதனால்  எவ்வளவு  பாதிப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக  ஆய்வு செய்து ஊடகங்ககள்   அலசின.
கிட்டத்தட்ட இதை தமிழ் நாட்டின் தலையாய பிரச்னை ரேஞ்சுக்கு எல்லோரும் பேசினார்கள்.பல கோடி முதலீடு செய்ததால் சந்தேகமின்றி  லாபமோ நஷ்டமோ  எதுவுமே  கோடி ரேஞ்சில் தான் உலாவும்.

ஒரு சக  மனிதனுக்கு கஷ்டம் வரும்போது ஒரு மனித நேயத்துடன் அணுகியது பாராட்டத்தக்கதே.

 ஆனால் பிரச்னை என்னவென்றால்  நாட்டில் இதே போல் கஷ்டப்படுபவர்கள்  அத்தனை பேர் மீதும் இந்த கரிசனம் இல்லாதாதுதான் .
 ரூபாயின் மதிப்பு குறைந்ததால்  வெளிநாட்டிற்கு ஏற்றுமதி   செய்பவர்களுக்கு எவ்வளவு நஷ்டம், இறக்குமதி  செய்பவர்கள் எக்கச்சக்க அளவுக்கு கையை விட்டுப் போட வேண்டிய நிலைமை . வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்காக  பணம் அனுப்பும் பெற்றோர்கள் அதனால் எவ்வளவு பாதிப்படைவார்கள்  ? 
ரூபாய்   மதிப்பு  வீழ்ச்சி  அடைந்தது என்ற ஒரு  பிரச்னை யால்   ஏற்றுமதியாளர்   இறக்குமதியாளர் என்ற சமுதாயத்தின் பல பேரின் நஷ்டத்தை கணக்கிட்டால் 
தலைவாவை லேட்டாக ரிலிஸ் செய்ததால் சம்பத்தப்பட்டவர்கள் அடைத்த நஷ்டத்தை  விட பலமடங்கு அதிகமாக இருக்கும். 
இது போல நாட்டில் தலையாய பிரசினைகள்  ஏராளம்.
 ஆனால் நமது மக்களின் சினிமா மோகம்  மற்ற எந்த பிரச்னையையும் பார்க்கமுடியாதபடி கண்ணை மறைத்ததுதான்  மனதுக்கு வருத்தமே தவிர சினிமாவிற்கு நான்  எதிரி அல்ல.

No comments:

Post a Comment